aanmeegam.co.in/blogs/siththarkal/sivavakkiyar-songs-lyrics-tamil/25/
1 Users
0 Comments
4 Highlights
4 Notes
Tags
Top Highlights
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (496)
வல்லவாசல் ஒன்பதும் மருத்தடைத்த வாசலும் சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்பது இல்லையே (490)
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும் பாரபார பாரம் என்று பரிந்திருந்த பாவிகாள் நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல் தூரதூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே (493)
நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஓதுவேன் வானில் உள்ள சோதி அல்ல சோதி நம்முள் உள்ளதே நானும் நீயும் ஒத்தபோது நாடிக்காண லாகுமோ தானதான தத்ததான நாதனான தான்னா
Glasp is a social web highlighter that people can highlight and organize quotes and thoughts from the web, and access other like-minded people’s learning.